CRIME
அடச்சீ..சிறப்புக் கல்வி ஆசிரியை செய்த அசிங்கம்.. மாணவனுக்கு மதுபானம் வாங்கி கொடுத்து… ஹோட்டலில் உல்லாசமாக இருந்த 27 வயது ஆசிரியை.. நீதிமன்றம் கொடுத்த மரண அடி..!!
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ள டார்டன் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு கல்வி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த 27 வயதான ஆனா மார்கரெட் பேக்கன், தனது பள்ளியில் படித்து வந்த பதின்மவயது மாணவர் ஒருவருடன் பாலியல் உறவு கொள்வதற்காக மீண்டும் மீண்டும் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்து வந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆரம்பத்தில், அந்த மாணவன் 18 வயது பூர்த்தியாகிப் பள்ளியிலிருந்து பட்டம் பெற்று ஒரு மாதம் கழித்துதான் தாங்கள் உடலுறவு கொள்ளத் தொடங்கியதாகக் கூறி தப்பிக்க முயன்றார். ஆனால், போலீசார் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த ஹோட்டல் புகைப்படத்தைக் காட்டிய பின்னர், மாணவன் சிறுவனாக இருந்தபோதே அவனுடன் பாலியல் உறவை மேற்கொண்டதை ஒப்புக்கொண்டார். மேலும், மே 8 முதல் ஜூலை 4 வரையிலான காலகட்டத்தில் குறைந்தது நான்கு முறையாவது அவர் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்ததற்கான ஆதாரங்களும், அந்த ஹோட்டலில் மற்ற மாணவர்களுக்கும் அவர் மதுபானம் வாங்கிக் கொடுத்ததும் விசாரணையில் அம்பலமானது.
இந்த விவகாரத்தில், ஆசிரியையும் அந்த மாணவனும் மிகவும் ரகசியமாகத் தங்களின் அந்தரங்கப் புகைப்படங்களைத் கைப்பேசியில் வைத்திருந்ததுடன், அந்தச் சிறுவன் ஆசிரியையின் குடியிருப்பிலேயே தங்கி வந்ததாகவும் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார். 2022 ஆகஸ்டில் பணியில் சேர்ந்த மார்கரெட், 2024 பிப்ரவரியில் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட அதே நாளில் தனது பணியை ராஜினாமா செய்தார். ஆசிரியை மற்றும் மாணவர் இடையேயான இந்த எல்லை மீறிய ரகசியக் காதல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஆசிரியை மார்கரெட்டுக்கு நீதிமன்றம் தற்போது ஆறு மாத காலம் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
