LATEST NEWS
விஜய் அரசுக்கு வந்த திடீர் சோதனை!.. வெளிநாடு சென்று திரும்பிய அமைச்சர்களுக்கு மத்திய அரசு பறக்கவிட்ட நோட்டீஸ்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதன் அமைச்சர்கள் மற்றும் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் பல்வேறு அரசியல் விவாதங்களையும் சிக்கல்களையும் சந்தித்து வருகின்றன. தவெக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மக்கள் மத்தியில் தொடர் நேரடி ஆய்வுகளை மேற்கொள்வது ஆட்சி நிர்வாகத்திற்கானதா அல்லது வெறும் அரசியல் விளம்பரத்திற்கானதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகிய இருவரின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணம், தற்போது தமிழக அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர்கள் இருவரும் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்று திரும்பிய நிலையில், அவர்கள் பயண விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அரசுமுறைப் பயணங்களை மேற்கொள்ளும்போது மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகங்களின் முறையான அனுமதியைப் பெற்று, ‘ராஜதந்திர பாஸ்போர்ட்’ மூலமாகவே பயணிக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், இந்த இரு அமைச்சர்களும் உரிய அனுமதிகளைப் பெறாமலும், ராஜதந்திர பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தாமலும் தங்களது சொந்த பாஸ்போர்ட் மூலமாக வெளிநாட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விதிமீறல் விவகாரம் தற்போது மத்திய அரசின் கவனத்திற்குச் சென்றுள்ள நிலையில், உரிய அனுமதி பெறாமல் சொந்த பாஸ்போர்ட்டில் பயணித்தது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
