LATEST NEWS
அதிமுக – திமுக ரகசிய கூட்டணி?..பின்னணியில் இருக்கும் ‘அந்த’ மாஜி அமைச்சர்.. குண்டைத் தூக்கிப் போட்ட தவெக அமைச்சர் நிர்மல் குமார்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மரியாதைக்குறைவாக கருத்து தெரிவிக்கக் கூடாது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தினார். மேலும், மு.க.ஸ்டாலின் அதிருப்தியடைந்தால் தமிழகத்தில் த.வெ.க. அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை மின்வாரியத் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், அதற்கு பதிலளிக்கும் வகையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு முக்கிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் விமர்சித்துப் பேசினார்.
அமைச்சர் நிர்மல் குமார் தனது பேச்சில், தமிழகத்தில் தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனும், ராஜேந்திர பாலாஜியும்தான் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்படுவதாகவும், த.வெ.க. ஆட்சியைத் தரைமட்டமாக்கவும் அதன் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவும் இரு கட்சிகளும் தொடர்ந்து குதிரை பேர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், குதிரை பேரத்தில் ஈடுபட்டது தி.மு.க.தான் என்றும், அதில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இத்தகைய அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போது அரசு அதிகாரிகளைத் தன் அருகில் வைத்துக் கொண்டு பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
