LATEST NEWS
பதவியை ராஜினாமா செய்யத் துடித்த 6 MLA-க்கள்..! தவெக பனையூர் அலுவலகம் கொடுத்த ரெட் சிக்னல்..!!!
மேலும் 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர் ஒருவரின் மூலமாக அக்கட்சியின் தலைமைக்குத் தகவல் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் தலைமை அலுவலகம், அந்த சட்டமன்ற உறுப்பினர்களைச் சிறிது காலம் பொறுத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ராஜினாமா முடிவை தற்காலிகமாக தள்ளிப்போடச் சொன்னதற்கு, தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வரும் ‘குதிரை பேர’ விவகாரம் மிகத் தீவிரமாக இருப்பதே முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே தவெக தலைமை அவர்களுக்கு ரெட் சிக்னல் காட்டி, பொறுமை காக்கச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.இந்தச் சூழ்நிலைகளின் பின்னணியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தற்போது மிகுந்த அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
