“அதிமுகவில் அடுத்த அதிரடி…! சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்..!!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அதிமுகவில் அடுத்த அதிரடி…! சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்..!!!”

Published

on

அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார். உட்கட்சி விவகாரங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட அதிமுகவின் புதிய மாவட்ட செயலாளராக பசுபதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து, புதிய மாவட்ட செயலாளர் பசுபதிக்கும், சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

Advertisement

இந்த உட்கட்சி மோதலின் விளைவாகவே சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்களான ஆனந்தி, வெங்கடேஷன், எழில்ராஜ், விஜயன் உள்ளிட்ட 11 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக சி.வி. சண்முகம் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவி தற்போது பசுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in