“மாமா வேணாம்..ம்மா”.. நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. தடுக்க வந்த தாயை கொன்றுவிட்டு மாப்பிளை செய்த பகீர் காரியம்… விருதுநகரையே உலுக்கிய கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“மாமா வேணாம்..ம்மா”.. நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. தடுக்க வந்த தாயை கொன்றுவிட்டு மாப்பிளை செய்த பகீர் காரியம்… விருதுநகரையே உலுக்கிய கொடூரம்..!!

Published

on

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியைச் சேர்ந்த முத்துக்குமார்-விநாயக ஜோதி தம்பதியரின் மூத்த மகள் வர்ஷா. நர்சிங் படித்து வரும் இவருக்கும், இவரது அத்தை மகனான யுவராஜா என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், யுவராஜாவைத் திருமணம் செய்து கொள்ள வர்ஷா திடீரென மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யுவராஜா, நேற்று காலை வர்ஷா வீட்டில் தனியாகத் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.

மகள் வெட்டப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தடுக்க வந்த தாய் விநாயக ஜோதியையும், “இந்தப் பிரச்சினைக்கு நீதான் காரணம்” எனக் கூறி யுவராஜா அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் விநாயக ஜோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த விநாயக ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வர்ஷாவை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கிடையே, கொலையாளி யுவராஜா அரிவாளுடன் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் நேராகச் சென்று சரணடைந்த நிலையில், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in