நிலத்தை விற்று லண்டனுக்கு அனுப்பிய பெற்றோர்… பிணமாக மீட்கப்பட்ட மகள்.. 5 முறை கத்தியால் குத்திய சைக்கோ கொலையாளி.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

நிலத்தை விற்று லண்டனுக்கு அனுப்பிய பெற்றோர்… பிணமாக மீட்கப்பட்ட மகள்.. 5 முறை கத்தியால் குத்திய சைக்கோ கொலையாளி.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் டர்ன் தாரன் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான கிரந்தீப் கவுர், இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், அவர் தங்கியிருந்த அறையிலேயே கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கிரந்தீப் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கிரந்தீப்பைத் தாக்கித் தனது பாக்கெட்டில் இருந்த கத்தியால் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் 5 முறை கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கிரந்தீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலையைச் செய்துவிட்டு கையில் கத்தியுடன் தப்பியோடிய டேனியல் சீன் ஜேம்ஸ் என்ற நபரை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் லண்டன் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில், கொலையாளி டேனியல் ஏற்கனவே லண்டனில் ஒரு வாலிபரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியபோது, தஞ்சம் புகுவதற்காக ஆக்ஸ்பிரிட்ஜ் சாலையில் உள்ள கிரந்தீப்பின் வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. அங்கே தூங்கிக் கொண்டிருந்த கிரந்தீப் தன்னைப் போலீசில் காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்ற பயத்தில், அவரை டேனியல் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தங்கள் நிலத்தை விற்றுப் பெரும் கனவுகளோடு மகளை இங்கிலாந்திற்குப் படிக்க அனுப்பிய பெற்றோர், தற்போது மகளின் மரணச் செய்தியைக் கேட்டு மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர். மேலும், தங்களது மகளின் உடலை விரைவில் இந்தியாவிற்கு மீட்டு வர வேண்டும் என்று மத்திய அரசிற்குக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in