“மூன்று திருமணங்கள்.. நள்ளிரவில் கண்ணீர் விட்டு அழுத அமீர் கான்.. 35 ஆண்டு கால நண்பர் உடைத்த பகீர் ரகசியம்”..!! – cinefeeds
Connect with us

CINEMA

“மூன்று திருமணங்கள்.. நள்ளிரவில் கண்ணீர் விட்டு அழுத அமீர் கான்.. 35 ஆண்டு கால நண்பர் உடைத்த பகீர் ரகசியம்”..!!

Published

on

60 வயதில் 3-வது திருமணம் செய்த அமீர் கான் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், அவரது 35 கால நண்பர் அமீன் ஹாஜி ஆதரவாகப் பேசியுள்ளார். முந்தைய விவாகரத்துகளின்போது அமீர் அவர் மனமுடைந்து கண்ணீர் விட்டதை நேரில் பார்த்தேன். மேலும் சினிமா மீது அமீர் காட்டிய தீவிர உழைப்பே அவரது தனிப்பட்ட இழப்புகளுக்குக் காரணம்; அதைத் தெரியாமல் யாரும் அவரை கேலி செய்ய வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அமீரின் முந்தைய உறவுகள் குறித்துப் பேசிய அமீன், அவர் எப்போதும் திருமண பந்தத்தை மிகுந்த கண்ணியத்துடனும் நேர்மையுடனும் நடத்தியவர்.

முன்னாள் மனைவிகளின் குழந்தைகளை அவர் இப்போதும் நன்றாகப் பார்த்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமீர் கானுக்கு 1986-ல் ரீனா தத்தாவுடன் முதல் திருமணமாகி ஜுனைத், ஈரா என்ற குழந்தைகளும், 2005-ல் கிரண் ராவுடன் இரண்டாவது திருமணமாகி ஆசாத் என்ற மகனும் உள்ளனர். 2021-ல் கிரண் ராவை பிரிந்த போதிலும் இன்றும் அவர்கள் நல்ல நண்பர்களாகத் தொடர்கின்றனர். அமீர் – கௌரி ஸ்ப்ராட்டின் இந்த எளிய 3-வது திருமணத்தில் அமீரின் குழந்தைகளான ஜுனைத், ஈரா மற்றும் அவரது மருமகன் நூபுர் ஷிகாரே ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in