LATEST NEWS
“பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!.. டிக்கெட் விலை உயர்வு கிடையாது.. முதல்வர் விஜய் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு… மகிழ்ச்சியில் மக்கள்”..!!
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், மாற்று வழிகளில் போக்குவரத்துத் துறையின் வருமானத்தைப் பெருக்குவதற்கு முதலமைச்சர் விஜய் புதிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் டீசல் விலையும் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்று பரவலாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தச் சூழலில், பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களுக்குப் கூடுதல் சுமையை ஏற்படுத்தக் கூடாது என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாகப் பேசிய முதல்வர் விஜய், பேருந்துகள் மற்றும் பயணச் சீட்டுகளின் பின்புறத்தில் விளம்பரங்கள் செய்வதன் மூலம் போக்குவரத்துத் துறைக்கு மாற்று வருவாய் ஈட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வருமானத்தைப் பெருக்க எடுக்கப்பட்டுள்ள இந்த மக்கள் நலன் சார்ந்த அறிவுரை, தற்போதைய சூழலில் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
