LATEST NEWS
BREAKING: “கட்டுக்கடங்காத கூட்டம்… மயங்கி விழுந்த 100 பேர்.. பூரி தேரோட்டத்தில் பரபரப்பு..!!
ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக ஒரே நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். இந்த அதீத கூட்ட நெரிசலின் காரணமாக 100 பேர் வரை மயக்கமடைந்து, காயமடைந்த நிலையில் ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
https://www.instagram.com/reel/Da2Iv2mT7NJ/?utm_source=ig_web_button_share_sheet
பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காமல் இருந்ததால், அங்கு பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
