LATEST NEWS
செம ஷாக்.! விஜய் ஆட்சியை கவிழ்க்க திமுகவின் மாஸ்டர் பிளான்… செந்தில்பாலாஜி தலைமையில் ‘ஆபரேசன் மேகாலயா’… 15 தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு வலைவீச்சு..!!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கான ரகசியத் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆபரேசன் மேகாலயா’ என்ற பெயரில், திமுக தரப்பில் சுமார் 15 தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை வீழ்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சதித்திட்டம், திமுகவின் முக்கியப் புள்ளியான செந்தில்பாலாஜியின் வழிகாட்டுதலின்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான குதிரை பேரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபர்கள், காவல்துறையினரிடம் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் மூலமாகவே இந்த ‘ஆபரேசன் மேகாலயா’ விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், இந்த சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மற்றும் பேரம் பேசும் விவகாரத்தில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ள இந்த விவகாரம், தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய அரசியல் மோதலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
