LATEST NEWS
“உதயநிதி கையில் முழு அதிகாரம்?.. மு.க.ஸ்டாலின் கொடுத்த க்ரீன் சிக்னல்.. அலறும் சீனியர்கள்.. திமுகவில் அரங்கேறும் அதிரடி ‘ஆபரேஷன் க்ளீன் அப்’.. உச்சகட்ட பரபரப்பு..!!
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கடுமையான அரசியல் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக, தவெக-விடம் ஆட்சியை இழந்ததுடன், மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலேயே தோல்வியடைந்ததற்கு கட்சியின் சீனியர்களின் அலட்சியம், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் தவெக பக்கம் திரும்பியதே முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, லண்டனில் இருந்து திரும்பியவுடன் மு.க.ஸ்டாலின் கட்சியில் அதிரடி மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களைப் பதவிகளில் இருந்து விலகக் கோரி அவர்களை ஓரங்கட்டவும், கட்சியின் எதிர்காலமாகக் கருதப்படும் உதயநிதி ஸ்டாலினிடம் முழு அதிகாரத்தையும் ஒப்படைக்கவும் முடிவெடுத்துள்ளார்.
இந்த வியூகத்தின்படி, முதல் தலைமுறை மற்றும் இளைஞர்களின் வாக்குகளை மீண்டும் கவரும் நோக்கில் கட்சியில் இளைஞர் பட்டாளத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக முயன்று வருகிறார். கடந்த தேர்தலில் உதயநிதியால் வாய்ப்பு பெற்றவர்களின் தோல்விக்கு மூத்த நிர்வாகிகளின் ஒத்துழையாமையே காரணம் என்ற புகார்கள் எழுந்துள்ள சூழலில், மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இதனால் தங்களது பதவிகளையும் செல்வாக்கையும் காப்பாற்றிக் கொள்ள வழிதெரியாமல் திமுக-வின் சீனியர் நிர்வாகிகள் பெரும் தவிப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
