LATEST NEWS
அடப்பாவி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா..? வீட்டின் முன் விளையாடிய குழந்தை மீது ஏறிய கார்… “மருத்துவமனைக்கு வாங்க நான் பாத்துக்குறேன்” என பெற்றோரிடம் நாடகம்.. பாதியிலேயே எஸ்கேப் ஆன கார் டிரைவர்..!!
கான்பூர் தேஹாத் பகுதியின் ரசூலாபாத்தில் உள்ள நேரு நகர் 8-வது வார்டில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஒரு பச்சிளம் குழந்தை மீது கார் ஏறியதில் அக்குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோகச் சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியில் அக்குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் ஓட்டுநர் ஒருவர் காரைத் திருப்ப முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது ஏறி நசுக்கியது. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஓடிவந்து, காரின் அடியில் சிக்கியிருந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கான்பூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
https://twitter.com/ashishpaswan0/status/2085366027781841224/video/1
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், “நீங்கள் மருத்துவமனைக்கு வாருங்கள், நான் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறிவிட்டு, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பாதியிலேயே தப்பி ஓடிவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிய கார் ஓட்டுநரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
