LATEST NEWS
“செம்ம மாஸ் ஐடியா பா இது.. !” போன் பார்த்தால் இனி இதுதான் தண்டனை.. அலறி தெறித்து ஓடிய குழந்தைகள்.. பள்ளியின் வினோதமான முயற்சியைப் பார்த்து ஆடிப்போன பெற்றோர்கள்.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!
மாணவர்களின் அலைபேசி பயன்பாட்டைக் குறைத்து, அவர்களிடம் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்காக பள்ளி ஒன்று ஒரு விசித்திரமான விழிப்புணர்வு நாடகத்தை நடத்தியுள்ளது. அதன்படி, ஒரு சிறுவனின் கண்களில் ரத்தக்கரையுடன் கட்டுப்போடப்பட்டு பள்ளிக்கு அழைத்து வரப்படுகிறான். “அதிகமாக போன் பார்த்ததால் தான் இவனது கண்கள் பாதிக்கப்பட்டு ரத்தம் வடிகிறது” என்று ஆசிரியர்கள் பிற குழந்தைகளிடம் எச்சரிக்கின்றனர். அதன் பிறகு, பயத்தை சோதிப்பதற்காக ஆசிரியர்கள் ஒவ்வொரு குழந்தையிடமும் செல்போனைக் கொடுக்க முயலும் போது, குழந்தைகள் அலறியடித்துக்கொண்டு தலைதெறித்து ஓடுகின்றனர்.
A school has introduced a unique initiative to reduce students’ mobile phone usage by encouraging healthier habits and greater engagement in school activities. The innovative approach has gone viral, sparking mixed reactions and widespread discussion online pic.twitter.com/PFDXSnPNBY— Arti Nirmalkar (@ArtiNirmal19987) August 6, 2026
நவீன தொழில்நுட்பத்திற்குச் சிறுவர்கள் அடிமையாவதைத் தடுத்து, அவர்களை விளையாட்டுகள் மற்றும் பயனுள்ள கற்றல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வைப்பதே இந்த அதிரடி நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இந்த வினோதமான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகளிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சில பெற்றோர்கள் குழந்தைகளை போனில் இருந்து தூர வைக்க இது நல்ல வழி என்று பாராட்டி வரும் நிலையில், சிறு குழந்தைகளிடம் அச்சத்தை உருவாக்குவது அவர்களின் மனநலனைப் பாதிக்கும் எனச் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
