LATEST NEWS
மகளிருக்கு ஜாக்பாட்..! மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்கிறது..? பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு வெளியிட முதல்வர் விஜய் தீவிரம்..!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் விஜய் நேற்று அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தவெக தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மிக விரைவாக நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர்களுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளதாகத் தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வரவிருக்கும் புதிய பட்ஜெட்டில் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் தொகை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை உடனுக்குடன் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் காட்டி வரும் இந்த வேகம் பொதுமக்களிடையேயும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
