LATEST NEWS
BREAKING: நகைப்பிரியர்களுக்கு நற்செய்தி… தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடி சரிவு..!!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 28 கிராம் 4,000 டாலர்களுக்குக் கீழ் சரிந்துள்ளதன் எதிரொலியாக, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் விலை மளமளவெனக் குறைந்து வருகிறது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளதால், பல மாதங்களுக்குப் பிறகு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,05,000-க்கும் கீழ் சென்றுள்ளது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால், வரும் நாள்களில் நகை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
