CINEMA
BREAKING : சாச்சனா நமிதாஸுக்கு துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு..!
‘மகாராஜா’ திரைப்படத்தில் நடித்த இளம் நடிகை சாச்சனா நமிதாஸுக்குச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தில், அவரது மகளாக சாச்சனா நமிதாஸ் நடித்திருந்தார். படத்தில் இவர்களது தந்தை-மகள் பாசப் பிணைப்பும், அவரது எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில், தற்போது அதற்கு அங்கீகாரமாக இந்த உயரிய தேசிய விருது கிடைத்துள்ளது.
இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சாச்சனாவுக்குத் துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
