LATEST NEWS
“எலும்பு எல்லாருக்கும் இருக்கு பாஸ்… ஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு.. ஆடிப்போன திமுக MLA மார்க்கண்டேயன்..!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசியதுடன் “சட்டமன்றத்தில் வைத்து அவரது எலும்பை உடைப்பேன்” என பகிரங்க மிரட்டல் விடுத்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மார்க்கண்டேயனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கூட்டணி அமைச்சரான விசிகவைச் சேர்ந்த வன்னி அரசு இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆட்சியைப் பிடித்து மக்களுக்காகச் சேவையாற்றாமல், அதிகாரத்தைத் தனிநபர் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தியவர்கள் தோல்வி விரக்தியில் இதுபோன்று அநாகரிகமாகச் செயல்படுவதாக அவர் சாடியுள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்படப் பலர் முதலமைச்சர் குறித்துத் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதையும் சுட்டிக்காட்டி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
சட்டமன்றத்திற்குள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய மார்க்கண்டேயன் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய வன்னி அரசு, “எலும்புகள் எல்லோருக்கும் உண்டு” என்பதை நினைவூட்டுவதாக எச்சரித்துள்ளார். முதலமைச்சருக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ விடுத்த மிரட்டலும், அதற்காக அவர் கைது செய்யப்பட்டதும், கூட்டணி அமைச்சரின் இந்த காட்டமான பதிலடியும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
