LATEST NEWS
2, 3 கோடி ரூபாய் கொடுத்து டாக்டர் சீட் வாங்குறவன்.. கத்தரிக்கோலை வயித்துல வச்சி தச்சிட்டு போயிடுவான்… அப்படிப்பட்டவன் நமக்கு தேவையா..? புது குண்டை தூக்கிப்போட்ட நயினார் நாகேந்திரன்..!!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நீட் தேர்வு மற்றும் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துக் காரசார கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “2, 3 கோடி ரூபாய் கொடுத்து மருத்துவச் சீட்டை வாங்குபவன் கத்திரிக்கோலை வயிற்றிலேயே வைத்துத் தைத்துவிட்டுப் போய்விடுவான்; அப்படிப்பட்ட மருத்துவர் தேவையா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீன நாட்டின் கொடியை ஏந்தி நிற்பவனுக்கு என்ன வேலை என்றும் சாடினார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வை எழுதி முடித்து முடிவுகளும் வெளியாகிவிட்ட நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கூறுவதில் நியாயமில்லை என்றும், தமிழக அரசின் TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலும்கூட வினாத்தாள்கள் கசிந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் நடைபெறும் தேசத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் கடுமையாகக் கண்டித்தார். இதன் வெளிப்பாடாக, ராகுல் காந்தியின் நடவடிக்கைகளைக் கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை (சத்தியமூர்த்தி பவன்) முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் அதிரடியாக அறிவித்தார்.
