LATEST NEWS
BIG BREAKING: இன்று நாடே அதிரும்… CJP பரபரப்பு அறிவிப்பு..!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அதற்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் நடத்திய தடியடியைக் கண்டித்து, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) இன்று நாடு தழுவிய ஒருநாள் அமைதிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. “ஒவ்வொரு மாவட்டம், ஒரு நாள், ஒரு கோரிக்கை” (Every District, One Day, One Demand) என்ற முழக்கத்துடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் முதன்மையான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் கடந்த ஜூலை 20 அன்று CJP நடத்திய நாடாளுமன்ற நோக்கிய பேரணியின் போது, காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் தடியடி நடத்தியதில் மாணவிகள் உட்படப் பலர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறையைக் கண்டிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும் இன்று நடக்கும் போராட்டத்தில் தங்ளுடன் இணையுமாறு பல்வேறு மாணவர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் மக்கள் நல அமைப்புகளுக்கு CJP அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று, அமைதியான முறையில் கோரிக்கை மனுக்களை அளித்து இந்த போராட்டத்தை ஒருங்கிணைக்குமாறு ஒரு விரிவான வழிகாட்டுதலையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
