LATEST NEWS
சினிமா பாத்துட்டு அழுது சீன் போடுறது நல்லாட்சியா..? கவர்ச்சி பேச்சு வேலைக்காவாது பாஸ்.. தவெக-வை கிழித்து தொங்கவிட்ட பிரமேலதா விஜயகாந்த்..!!
திரையரங்கில் படம் பார்த்துவிட்டு கண்ணீர் சிந்தி சீன் போடுவதும், மக்களிடம் கவர்ச்சியாகப் பேசுவதும் மட்டுமே நல்லாட்சி ஆகிவிடாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அமைச்சர்கள் பலர் கண்ணீர் விட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் ஆட்சியாளர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், நிஜ வாழ்க்கையில் மக்களுக்காகப் உழைக்கும் ‘ரியல் ஹீரோக்களாக’ செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சினிமா வேறு, நிஜ அரசியல் ஆட்சி நிர்வாகம் வேறு என்பதை உணர்ந்து அரசும் அதன் அமைச்சர்களும் செயல்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
திரையில் வரும் காட்சிகளைப் பார்த்து உருகி உணர்ச்சிவசப்படுவதை விட்டுவிட்டு, மக்க எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும்தான் ஒரு சிறந்த அரசின் வெற்றி அடங்கியுள்ளது என்று பிரேமலதா சாடியுள்ளார்.
