LATEST NEWS
அய்யோ!.. ஆபத்தான மலைப்பாதையில் அசைந்து வந்த டிரக்… அடுத்த நொடி நடந்த பேரதிர்ச்சி.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
மகாராஷ்டிராவின் ஆபத்தான மலைப்பாதையான மல்ஷேஜ் காட் பகுதியில், பிக்கப் டிரக் ஒன்று பிற வாகனங்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் அஜாக்கிரதையாக ஓட்டப்பட்ட அதிர்ச்சித் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூலை 24 அன்று பதிவான அந்த டாஷ்கேம் காணொளியில், கட்டுப்பாடின்றி தள்ளாடிய அந்த டிரக், வீதியை விட்டு விலகி குட்டைக்குள் இறங்கியும், எதிரே வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மோதாமல் மயிரிழையில் தப்பியும், ஆபத்தான வளைவுகளில் பிற வாகனங்களை முந்தியும் செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
A pickup truck swerving across lanes on Malshej Ghat. Off the road into a puddle, narrowly missing a biker. Then straight into oncoming traffic.
Witnesses assumed drunk driving. When they finally forced the truck to stop, the driver was still holding his phone to his ear.… pic.twitter.com/rxqF3TI8Rz— Rajneeti Tadka 🌶️ 🔥 (@RajneetiTadka) July 26, 2026
இதனைத் தொடர்ந்து, அப்பாதையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் துரத்திச் சென்று அந்த பிக்கப் டிரக்கைப் மடக்கிப் பிடித்தனர். வாகனத்திற்குள் போனில் பேசி கொண்டிருந்து ஓட்டுநரை வெளியே இழுத்து அவரது சாவியைப் பறிமுதல் செய்த பொதுமக்கள், பின்னர் அங்கு வந்த காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படும் அந்த ஓட்டுநரைக் கைது செய்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
