LATEST NEWS
“இதைக்குடி… பலசாலி ஆவாய்” சீடருக்கு தன் வியர்வையைக் குடிக்கக் கொடுத்த ஜிம் மாஸ்டர்… சோசியல் மீடியாவில் தீயாய் பரவிய வீடியோ… நெட்டிசன்கள் வறுத்தெடுத்ததால் அடுத்து நடந்த சம்பவம்..!!
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தின் பயிற்சியாளர், தனது வியர்வை ஒழுகும் டி-சர்ட்டை பிழிந்து, அந்த வியர்வையைத் தனது சீடருக்குக் குடிக்கக் கொடுக்கும் அருவருப்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “இதைக்குடி, நீ இன்னும் பலசாலி ஆவாய்” என்று அந்தப் பயிற்சியாளர் கூறுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலான உடனே, இது மிகவும் முட்டாள்தனமான மற்றும் ஆரோக்கியமற்ற பொறுப்பற்ற செயல் என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து, அந்தப் பயிற்சியாளரை சமூக வலைதளங்களில் கடுமையாகக் கிண்டல் செய்து வந்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து, ‘ராணாராக்’ என்று அழைக்கப்படும் அந்த ஜிம் மாஸ்டர் தேஜ்பீர் சிங் ராணா, கைகளைக் கூப்பிப் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இந்த வீடியோ யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்குத் தான் மிகவும் வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவருடன் இருந்த சீடர் ராஜன் கூறுகையில், இந்த வீடியோ தவறுதலாகப் பதிவிடப்பட்டுவிட்டதாகவும், இது இவ்வளவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தங்களுக்குத் தெரியாது என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.
தற்போது இந்தத் தவறான வீடியோவை அனைத்து சமூக வலைதளப் பக்கங்களிலிருந்தும் நீக்கிவிட்டதாகத் தெரிவித்த உடற்பயிற்சிப் பயிற்சியாளர் தேஜ்பீர் சிங், இனிவரும் காலங்களில் மிகவும் பொறுப்பான, நன்கு எடிட் செய்யப்பட்ட மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் வகையிலான நல்ல உள்ளடக்கங்களை மட்டுமே பகிர்வேன் என்று உறுதியளித்துள்ளார்.
