LATEST NEWS
அய்யோ கடவுளே..! தாய் துணி துவைத்துக் கொண்டிருந்தபோதே… 1 மாத குழந்தையைக் கடித்துக் குதறிய நாய்..! மருத்துவமனை செல்லும் வழியிலேயே முடிந்தது சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள விந்தியச்சல் காவல் எல்லைக்குட்பட்ட கல்னா கஹ்வார் கிராமத்தில், தெருநாய் தாக்கியதில் ஒரு மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த சந்திரமா பிந்த் – கவிதா தம்பதியின் ஒரு மாத பெண் குழந்தையான முனிதா, வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் வீட்டின் தாழ்வாரத்தில் உள்ள ஒரு கல்லின் மீது கிடத்தப்பட்டிருந்தாள். தாய் கவிதா ஈரத் துணிகளைத் துவைப்பதற்காகச் சென்ற நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கவிதா துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, வெளியிலிருந்து திடீரென வந்த தெருநாய் ஒன்று, தாழ்வாரத்தில் படுத்திருந்த குழந்தையைக் கவ்வி கீழே தள்ளியது. பின்னர் அக்கணமே அக்குழந்தையின் தலை மற்றும் முகப் பகுதியை நாய் கொடூரமாகக் கடித்துக் குதறியது. குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த தாய், கையில் கிடைத்த தடியால் நாயை அடித்து விரட்டினார்.
நாய்க்கடியால் பலத்த காயமடைந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் குடும்பத்தினர் முயன்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து மண்டல மருத்துவமனை மருத்துவர் பிரசாந்த் திரிபாதி கூறுகையில், தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட பலத்த நாய்க்கடி காயங்களால் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் குடும்பத்தினர் குழந்தையின் இறுதிச்சடங்கைச் செய்து முடித்த நிலையில், இச்சம்பவம் குறித்து தனக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை என விந்தியச்சல் காவல் நிலைய ஆய்வாளர் அஜித் சிங் தெரிவித்துள்ளார்.
