Uncategorized
சூடுபிடிக்கும் நடிகர் சுஷாந்த்தின் மர ண விவகாரம்..! நெ ருங்கிய தோழியின் வா க்குமூலம்..! உண்மை புலப்படுமா..?
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர ணம் தொடர்பாக அவரது நெ ருங்கிய தோழியான ரோகினி ஐயரிடம் நேற்று காலை விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையில் ரோகினி அவர்கள் அளித்த வா க்குமூலம் குறித்து போலீசார் தகவல் எதுவும் வெளியிடவில்லை. முன்னதாக ரோகினி ஐயர், சுஷாந்த் சிங் மர ணம்
தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் மிக நீளமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘இதை நான் சொல்ல வேண்டும். என்னுடைய சிறந்த நண்பர் இப்போது இல்லை.
அதை என்னால் இன்னும் ஏற்றுக்கொ ள்ள முடியவில்லை. முதலில் சுஷாந்த் தன்னுடைய புகழ் மற்றும் தன்னை குறித்த மற்றவர்களின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொ ள்வதில்லை. அதே போல தனக்கு நெ ருக்கமானவர்கள் த விர மற்றவர்கள் எழுதும் பதிவையும் அவர் கண்டு கொ ள்வதில்லை. போலி நண்பர்கள், சிறிய போன் கால்கள் எல்லாம் அவருக்கு பிடிக்காது. மற்றவர்களை போல பார்ட்டி எதுவும் சுஷாந்த்துக்கு தேவைப்படவில்லை. அவருக்கென தனி ராஜ்யத்தை அமைத்துக் கொண்டார். சினிமாத்துறை என்பது அவரது வாழ்வில் ஒரு சிறிய பங்கு தான்.
அத்தனை தாண்டி அவரது உலகத்தில் இன்னும் பெ ரும்பகுதி உள்ளது. அவர் விருதுகள் பற்றி கவ லைப்பட்டதில்லை. அதே போல 100 கோடி படம் கொடுக்க வேண்டும் எனவும் ஆசைப்பட்டதில்லை. அவர் தொண்டு நிறுவனங்களில், அறிவியல் திட்டங்கள் மற்றும் உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்ட புதுமைகளில் முதலீடு செய்தார். எனவே தயவு செய்து அவரைப் பு ரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள் அல்லது உங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்ய அவரது திறமையைக் குறைக்க வேண்டாம்’ என அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் கூறிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதே போல இன்னொரு பதிவில், ‘நீங்கள் அவரைக் கொண்டாட விரும்பினால் அவரது வாழ்க்கையை கொண்டாடுங்கள். அவர் வைரம் போன்றவர். அவர் அக்கறை கொண்ட மூன்று நண்பர்களில் நானும் ஒருவர் என்பதில் எப்போது நான் நன்றிக்கடன் பட்டிருப்பேன். அவரை பற்றி யாருக்கும் சரியாக தெரியவில்லை’ என்பது உட்பட இன்னும் நீள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
