LATEST NEWS
இராணுவ அதிகாரி கிட்டயே சுங்கக்கட்டணம் கேட்குறீங்களா..? டோல்கேட் ஊழியரிடம் எகிறிய ராணுவ அதிகாரி மனைவி… கடைசியில் நடந்தது என்ன தெரியுமா..? டோல்கேட் ஊழியர்களை பாராட்டும் இணையாவசிகள்..!!
தனியார் மஹிந்திரா எஸ்.யு.வி காரில் தனது மனைவியுடன் சுங்கச்சாவடிக்கு வந்த ராணுவ அதிகாரி ஒருவர், தான் பணியில் இல்லாத நேரத்திலும் சுங்கக்கட்டணம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர், “ராணுவ வீரர்கள் பணியில் இருக்கும்போது மட்டுமே சுங்கக்கட்டண விலக்கு உண்டு; விடுமுறையிலோ அல்லது தனிப்பட்ட பயணங்களிலோ இருக்கும்போது கட்டணம் செலுத்த வேண்டும்” என்று விதிகளை மிகவும் அமைதியான முறையில் எடுத்துரைத்தார்.
ஆனால், அந்த ராணுவ அதிகாரியோ, “நாங்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதே (Posted) எப்போதும் பணியில் இருப்பதாகத்தான் அர்த்தம்” என்று கூறி கட்டணம் செலுத்த முடியாது என அடம்பிடித்தார். அவருடன் வந்த அவரது மனைவியும் கோபத்துடன் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சுங்கச்சாவடி ஊழியர், “நீங்கள் பணியில் தான் இருக்கிறீர்கள் என்றால் அதை மேலதிகாரிகள் மூலம் உறுதிப்படுத்துங்கள்” என்று கூறியதோடு, அவர்களிடம் ராணுவ வாகனமோ அல்லது அதிகாரப்பூர்வப் பணிச் சான்றோ இல்லாமல் வெறும் அடையாள அட்டை மட்டுமே இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.
https://twitter.com/MandeepRajBhar9/status/2086424567711502796/video/2
இந்த வாக்குவாதம் முழுவதிலும், ராணுவ அதிகாரியின் மனைவி மிகவும் கோபமாகப் பேசியபோதிலும், அந்த இளம் சுங்கச்சாவடி ஊழியர் சிறிதும் பதற்றமடையாமல், நிதானத்தையும் கண்ணியத்தையும் இழக்காமல் மிகவும் மரியாதையாகப் பதிலளித்தார். ஊழியரின் உறுதியான நிலையாலும், விதிகளைச் சரியாகச் சுட்டிக்காட்டியதாலும், வேறு வழியின்றி இறுதியில் அந்த ராணுவ அதிகாரி சுங்கக்கட்டணத்தைச் செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
