LATEST NEWS
BREAKING: தவெகவில் வெடித்தது பதவி சண்டை.. உருவானது பெரும் பரபரப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவில் இருந்து இணைந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பழைய நிர்வாகிகளும், ஆரம்பம் முதலே உழைத்தவர்களும் இதனால் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக, மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் சார்ந்த தொகுதிகளையே புதிய மாவட்டங்களாகத் தவெக தலைமை அறிவித்திருப்பது, இந்த புகைச்சலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்த அதிருப்தி காரணமாக, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று தவெக தலைமைக்கு நிர்வாகிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மட்டுமன்றி, ஆரம்ப காலம் தொட்டே விஜய்யுடன் பயணித்த விஜய் மக்கள் இயக்கத்தின் பழைய முக்கிய நிர்வாகிகளும் கைகோர்த்துக் கொண்டு தலைமைக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
