இங்க எல்லாரும் அந்த வார்த்தையை அதிகமா பேசுறீங்க… நீங்க அங்க போய் அத தேடுங்க இருக்கும்.. சட்டப்பேரவையில் கொந்தளித்த முன்னாள் அமைச்சர் சேகர் பாபு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இங்க எல்லாரும் அந்த வார்த்தையை அதிகமா பேசுறீங்க… நீங்க அங்க போய் அத தேடுங்க இருக்கும்.. சட்டப்பேரவையில் கொந்தளித்த முன்னாள் அமைச்சர் சேகர் பாபு..!

Published

on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தவெக மற்றும் திமுக வினரிடையே விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், “அப்பாவை காணோம்” என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்ததற்குத் திமுக முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தனது பாணியில் அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். பேரவையில் “காணோம், காணோம்” என்ற வார்த்தை அடிக்கடி ஒலிப்பது குறித்துப் பேசிய அவர், கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் அரசியல் ஆளுமையையும், அவர்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த திட்டங்களையும் யாராலும் மறைக்கவோ அல்லது காணாமல் ஆக்கவோ முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும் பேசிய சேகர்பாபு, “அப்பாவை அங்கே தேடாதீர்கள், மக்கள் மனதில் தேடுங்கள். எங்கள் தலைவர்கள் மக்கள் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். பேரவையில் ஆளுமையோடு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யத் தங்களுக்கு முழுமையான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், திமுக பவள விழா கண்ட ஒரு மாபெரும் இயக்கம் என்றும், தவெக போன்ற புதிய இயக்கங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், தாங்கள் பத்து அடி முன்னோக்கி எடுத்து வைப்போம் என்றும் காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in