LATEST NEWS
“கார் திரும்ப பெறப்படும் பாஸ்..” சொகுசு கார் கனவில் இருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு அதிரடி செக்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு..!!
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவது தொடர்பாக எழுந்துள்ள விவாதங்களுக்குத் தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அமைச்சர் ராஜமோகன் விளக்கமளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கார்கள் எவருக்கும் சொந்தமாக வழங்கப்படப் போவதில்லை.
அவை முற்றிலும் அதிகாரப்பூர்வப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படக் கூடியவை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் முடியும் போது, இந்த அரசு கார்கள் அனைத்தும் மீண்டும் அரசிடமே திரும்பப் பெறப்படும் என்ற மிக முக்கியமான விதியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
