“அடப்பாவமே..! ஒரு ஐபோனுக்காக இப்படியா…? செல்போன் பிடிவாதத்தால் சத்ரபதி சம்பாஜிநகரில் அநியாயமாய் பறி போன 3 உயிர்கள்..! நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடப்பாவமே..! ஒரு ஐபோனுக்காக இப்படியா…? செல்போன் பிடிவாதத்தால் சத்ரபதி சம்பாஜிநகரில் அநியாயமாய் பறி போன 3 உயிர்கள்..! நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ..!!”

Published

on

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள திஸ்கான் பகுதியில், பெற்றோர் மொபைல் போன் வாங்கித் தர மறுத்ததால், 19 வயதான குணால் சந்கூடே என்ற வாலிபர் மலைப்பகுதியின் விளிம்பில் நின்று தற்கொலை செய்து கொள்ள முயன்ற காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது. சம்பவத்தின் போது அக்கம் பக்கத்தினரும், அங்கிருந்த பொதுமக்களும் இளைஞரைத் தடுத்து நிறுத்த தீவிரமாக முயற்சி செய்தனர். முகத்தைத் தெளிவாகக் காட்டாத ஒருவர், “உனக்கு ஐபோன் தான் வேண்டும் என்றால், அதை எடுத்துக்கொள்; அது ஐபோன் 15 புரோ எனக்கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றார்.

எனினும், அந்த இளைஞர் எதையும் கேட்கும் நிலையில் இல்லாமல், “தற்கொலை ஒன்றுதான் ஒரே தீர்வு, வேறு வழியில்லை” எனக் கூறி பிடிவாதமாக இருந்தார். அதற்கு அங்கிருந்த அவரது தாயார், “வாழ்க்கையை முடித்துக் கொள்வது தீர்வாகாது” என்று கதறி அழுதார். மற்ற நபர்களும் செல்போன் தகராறைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், இந்த தீவிரமான முடிவைக் கைவிடுமாறும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் தொடர் கெஞ்சல்களையும் மீறி அந்த இளைஞர் திடீரென மலையிலிருந்து கீழே குதித்தார்.

Advertisement

இளைஞரைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையினர் கீழே பாதுகாப்பு வலையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது. குணால் மலையிலிருந்து குதித்த போது, அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது தந்தையும் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாயாரும் மலையிலிருந்து கீழே குதித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in