LATEST NEWS
“அனைத்து களங்களிலும் தயார்… தாக்கினால் பேரழிவு பதில்..!” அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் மிரட்டலுக்கு ஈரான் அதிரடி எச்சரிக்கை..!!
பொருளாதார தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு, நாங்கள் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரான் பதிலளித்துள்ளது. தரை, கடல், வான் மற்றும் இணையவெளி என அனைத்துத் தளங்களிலும் ஈரான் முழுத் தயார்நிலையிலேயே இருப்பதாக அந்நாட்டு நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
அமெரிக்கா தங்கள் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், தங்களுக்கு ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் செயல்படும் நட்பு நாடுகள் மீது அமெரிக்கா எடுக்கும் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் இறுதியில் தோல்லியிலேயே முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
