“மூட்டை மூட்டையா கட்டி வச்சிருந்த தங்கம்..!” ஸ்டாலின் அரசு செய்த அந்த ஒரு காரியம்.. எகிறிய மெகா வருமானம்.. சேகர்பாபு ஓப்பனாக உடைத்த அந்த மெகா உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மூட்டை மூட்டையா கட்டி வச்சிருந்த தங்கம்..!” ஸ்டாலின் அரசு செய்த அந்த ஒரு காரியம்.. எகிறிய மெகா வருமானம்.. சேகர்பாபு ஓப்பனாக உடைத்த அந்த மெகா உண்மை..!!

Published

on

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளை முறையாகப் பயன்படுத்தி, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் ஈட்டப்பட்டு வருவதாக பி.கே.சேகர்பாபு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கோயில்களில் எவ்விதப் பயனுமின்றி மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த தங்க உருப்படிகளை, இந்த அரசு உருக்கித் தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்தது.

அதன் மூலம் கிடைக்கப் பெறும் இந்த பெரும் வருவாயைக் கொண்டு, கோயில்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், பக்தர்களின் பல்வேறு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் முழுமையாகப் பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறைவனுக்கே சொத்து சேர்த்து, அந்த வருமானத்தின் மூலம் ஆன்மீகத் திருப்பணிகளைச் செய்து வரும் ஒரே அரசு திமுக அரசு தான் என்று குறிப்பிட்ட அமைச்சர் சேகர்பாபு, இதுவரை கோயில்கள் மூலம் 1,111 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in