சாரே செட்டிங்கா..? ரயில்வே ட்ராக்கில் ராஜநடைபோட்ட சிறுத்தை.. கூல்-ஆக லோகோ பைலட் செய்த காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாரே செட்டிங்கா..? ரயில்வே ட்ராக்கில் ராஜநடைபோட்ட சிறுத்தை.. கூல்-ஆக லோகோ பைலட் செய்த காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர்-கட்னி இரயில் பாதையில் உள்ள பன்வார்டங்க் சுரங்கப்பாதைக்குள் சிறுத்தை ஒன்று தண்டவாளத்தில் நடந்து சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இரயிலை இயக்கிய லோகோ பைலட், தனக்கு முன்னால் சிறுத்தை நடந்து செல்வதைக் கண்டதும், மோதல் ஏதும் ஏற்படாமல் இருக்க உடனடியாக இரயிலின் வேகத்தைக் குறைத்தார்.

இரயில் குறைந்த வேகத்தில் பின்னால் மெதுவாக வர, சிறுத்தை சிறிதும் பதற்றமின்றி தண்டவாளத்திலேயே நீண்ட தூரம் நடந்து சென்றது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த சிறுத்தை சுரங்கப்பாதையை விட்டு வெளியேறி, இரயில் பாதையைக் கடந்து அருகே இருந்த அடர்ந்த காட்டிற்குள் பத்திரமாகச் சென்றடைந்தது. இந்த அபூர்வ நிகழ்வை இரயில் என்ஜினில் இருந்த பணியாளர்கள் தங்கள் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இந்தச் சம்பவம் நடந்த கொங்சரா-பன்வார்டங்க் பகுதி அடர்ந்த வனப்பகுதியைக் கொண்டது என்பதால், இங்கு யானைகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அடிக்கடி காணப்படுவது வழக்கம். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பையும் ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்து சென்று தண்டவாளங்களை ஆய்வு செய்யும் இரயில்வே ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in