CINEMA
“தமிழ் பெண்களை விட அழகு வேற எங்கேயும் இல்ல” நாம பாத்த அழகிகளை இன்னும் கேமரால பாக்கல… தமிழ் பெண்கள் குறித்து நடிகர் சுந்தர்ராஜன் ஓபன் டாக்..!
திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல நடிகர் சுந்தர்ராஜன், “தமிழ் பெண்கள் யாரும் சினிமாவுக்கு நடிக்க வருவதில்லை; ஆனால் தமிழ் பெண்களை விட அழகு வேற எங்கேயும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், நிஜ வாழ்க்கையில் நாம் பார்க்கக்கூடிய தமிழ் அழகிகளை இன்னும் சினிமாவில் கூட முழுமையாகப் பார்க்கவில்லை என்று அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவரது இந்த உருக்கமான பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் பெண்களுக்குச் சினிமாவில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருக்கும் நிலையில், நடிகர் சுந்தர்ராஜனின் இந்த வெளிப்படையான கருத்து சமூக ஊடகங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.
