பகீர்..! நான் சொல்றவனத்தான் கல்யாணம் பண்ணனும்..! காதலனைத் திருமணம் செய்ய ஆசைப்பட்ட மகள்… தொண்டையை நெரித்துக் கொன்று உடலை ரகசியமாக எரிக்க முயன்ற குடும்பம்..! பிரேதப் பரிசோதனை அறிக்கையால் அம்பலமான கொடூரக் கொலை..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! நான் சொல்றவனத்தான் கல்யாணம் பண்ணனும்..! காதலனைத் திருமணம் செய்ய ஆசைப்பட்ட மகள்… தொண்டையை நெரித்துக் கொன்று உடலை ரகசியமாக எரிக்க முயன்ற குடும்பம்..! பிரேதப் பரிசோதனை அறிக்கையால் அம்பலமான கொடூரக் கொலை..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள பிப்லானி பகுதியில், 17 வயதான ஆயுஷி என்ற சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாகப் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஆயுஷியின் தாய் கமலா மற்றும் அவரது தாய்மாமன் விஜய் ராய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆயுஷி தான் விரும்பிய இளைஞரையே திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும், ஆனால் அவரது தாய் தனக்குப் பிடித்த நபருடன் தான் மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமண விவகாரம் தொடர்பாகத் தாய்க்கும் மகளுக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகராறு நடந்து வந்த நிலையில், தற்போது இதையே கொலைக்கான முக்கியக் காரணமாகக் கருதி கௌரவக் கொலை (Honor Killing) கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுஷி தனது தாயுடன் சேர்ந்து வீடுகளில் பாத்திரம் கழுவுதல் மற்றும் சமையல் வேலைகளைச் செய்து வந்தார். குடும்பத்தில் அவரது திருமணத்தைப் பற்றிய பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்த நிலையில், ஆயுஷி தான் விரும்பிய இளைஞரைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவரது தாய் கமலா இந்த விருப்பத்திற்குச் சம்மதிக்காமல், தனது விருப்பப்படிதான் திருமணம் நடக்கும் என்று கூறியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26 அன்று, மீண்டும் இதே திருமணம் தொடர்பான தகராறு வீட்டில் வெடித்தபோது, கமலாவும் அவரது சகோதரர் விஜய் ராயும் இணைந்து ஆயுஷியின் துப்பட்டாவால் அவரது தொண்டையை நெரித்துக் கொலை செய்ததாகப் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

ஆயுஷி இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் சம்பவம் குறித்துப் போலீசாருக்குத் தெரிவிக்காமல் உடலை அவசர அவசரமாக இறுதிச்சடங்கு செய்து தகனம் செய்ய முயன்றுள்ளனர். இத்தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்குச் விரைந்த பிப்லானி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆகஸ்ட் 29 மாலை வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமி மூச்சுத்திணறி இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்லானி காவல் நிலையப் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தாய் கமலா மற்றும் தாய்மாமன் விஜய் ராய் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in