நடுக்கடலில் அரங்கேறிய கொடூரம்..! இரண்டு கத்திகளுடன் பாய்ந்த பெண்.. பொதுமக்கள் மீது கத்திக்குத்து நடத்திய பெண் சுடப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடுக்கடலில் அரங்கேறிய கொடூரம்..! இரண்டு கத்திகளுடன் பாய்ந்த பெண்.. பொதுமக்கள் மீது கத்திக்குத்து நடத்திய பெண் சுடப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!!

Published

on

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், இரண்டு கத்திகளுடன் பொதுமக்களைத் தாக்கிய பெண் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை நடந்த இந்த கொடூரத் தாக்குதலில், அந்தப் பெண்ணால் குத்தப்பட்ட இருவரில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடுரோட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் அந்தப் பெண்ணைச் சூழ்ந்து நின்றபோது, அவர் கத்திகளை வீசி மிரட்டியதுடன், திடீரென ஒரு போலீஸ் அதிகாரியை நோக்கி பாய்ந்து தாக்க முயன்றார். நிலைமை கைமீறிப் போனதால், போலீசார் முதலில் ‘டேசர்’ துப்பாக்கி மூலம் மின்சார அதிர்வை ஏற்படுத்தி அவரை முடக்க முயன்றனர். எனினும், அந்தப் பெண் கட்டுப்படாததால் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

Advertisement

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இது தீவிரவாதத் தாக்குதல் இல்லை என்றும், அந்தப் பெண் எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் நியூயார்க் போலீசார் தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி, பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்த போலீசாரின் அதிரடி நடவடிக்கைக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in