அதிர்ச்சி..! மம்தா பானர்ஜி குடும்பத்தில் உலுக்கிய சோகம்… வீட்டின் 2-வது மாடியில் தூக்கில் தொங்கிய மருமகள்… கொலையா? தற்கொலையா? சிக்கிய பகீர் பின்னணி… அதிரடி விசாரணையில் போலீசார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிர்ச்சி..! மம்தா பானர்ஜி குடும்பத்தில் உலுக்கிய சோகம்… வீட்டின் 2-வது மாடியில் தூக்கில் தொங்கிய மருமகள்… கொலையா? தற்கொலையா? சிக்கிய பகீர் பின்னணி… அதிரடி விசாரணையில் போலீசார்..!!

Published

on

மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் தாய்வழியிலான ஒன்றுவிட்ட சகோதரரின் மகள் பிரிஷ்டி முகர்ஜி, இன்று அவரது வீட்டில் இருந்து தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பீர்பூம் மாவட்டம், ராம்பூர்ஹாட்டின் குசும்பா கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்து 31 வயதான பிரிஷ்டி முகர்ஜி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே பிரிஷ்டி மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரிஷ்டி முகர்ஜி தனது வேலையை இழந்திருந்ததாகவும், மேலும், அவருக்கு விவாகரத்து வழக்கு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

தொடர்ந்து காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராம்பூர்ஹாட் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இது தற்கொலையாக இருக்கலாம் என்றும், எனினும் மரணத்திற்கான முழுமையான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in