டெங்கு இல்ல..! மலேரியா இல்ல…! நதியில் குளித்துவிட்டு வந்த சிறுவனுக்குத் தொடங்கிய மர்ம நோய்… அடுத்தடுத்து 4 சகோதரர்கள் உடல் உறுப்புகள் செயலிழந்து பலியான பயங்கரம்… பின்னணியைத் தோண்டித் துருவும் சுகாதாரத் துறை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டெங்கு இல்ல..! மலேரியா இல்ல…! நதியில் குளித்துவிட்டு வந்த சிறுவனுக்குத் தொடங்கிய மர்ம நோய்… அடுத்தடுத்து 4 சகோதரர்கள் உடல் உறுப்புகள் செயலிழந்து பலியான பயங்கரம்… பின்னணியைத் தோண்டித் துருவும் சுகாதாரத் துறை..!!

Published

on

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் அடுத்தடுத்து சந்தேகத்திற்கிடமான ஒரு மர்ம நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்குள் நிகழ்ந்த இந்த தொடர் உயிரிழப்புகளால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்கள் அனைவருக்கும் கடுமையான காய்ச்சல், வயிறு வலி, வாந்தி, பேதி மற்றும் அதைத் தொடர்ந்து உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழப்பது போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. ஆனால், அவர்களுக்கு நடத்தப்பட்ட தொடக்கக்கட்ட சோதனைகளில் டெங்கு, மலேரியா மற்றும் கோவிட்-19 ஆகிய பரிசோதனை முடிவுகள் ‘நெகட்டிவ்’ என்றே வந்துள்ளன.

சம்பவத்தின் பின்னணியில், சிவபுரி நகரின் ஃபிசிகல் காவல் எல்லைக்குட்பட்ட சயீஸ்புரா பகுதியைச் சேர்ந்த 14 வயதான தாஹிர் கான் என்பவர் ஆகஸ்ட் 16 அன்று தனது நண்பர்களுடன் சிந்து நதியில் குளிக்கச் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிய இரண்டு நாட்களில் அவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 21 அன்று உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, அவருடைய உறவினரான 19 வயது அயாஜ் என்பவரும் ஆகஸ்ட் 21 அன்று சிகிச்சை பலனின்றி பலியானார். அடுத்தடுத்த நாட்களில் தாஹிரின் சகோதரர்களான 11 வயது தாருஃப் மற்றும் 9 வயது தாசிஃப் ஆகிய இரு சிறுவர்களும் ஆகஸ்ட் 31 அன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் கொசு லார்வா ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர். நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டறிய சிறுவர்கள் சிகிச்சை பெற்ற சிவபுரி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் குவாலியர் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலிருந்து மருத்துவப் பதிவேடுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் தனிப்பட்ட கண்காணிப்பில் வைத்துள்ள அதிகாரிகள், இது தொடர்பான விரிவான அறிக்கையை போபாலில் உள்ள மாநில சுகாதார இயக்குநரகத்திற்கு அனுப்பி வைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in