BREAKING: ஸ்டாலின் மனு அதிரடி தள்ளுபடி… கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: ஸ்டாலின் மனு அதிரடி தள்ளுபடி… கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Published

on

கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் பதிவான அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் தாள்களையும் 100% முழுமையாகச் சரிபார்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.

இந்த மனுவின் தன்மைகளை ஆராய்ந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு, இந்த மனு சட்டப்படி விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தவெக வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in