பழியை என் மேல போடுறீங்க… “திமுக தோல்விக்கு நான் காரணமா?” நான் அப்பவே சொன்னேன் கேட்கல… ஸ்டாலினுடன் மோதிய சபரீசன்: திமுகவில் வெடித்த உட்கட்சிப் புயல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பழியை என் மேல போடுறீங்க… “திமுக தோல்விக்கு நான் காரணமா?” நான் அப்பவே சொன்னேன் கேட்கல… ஸ்டாலினுடன் மோதிய சபரீசன்: திமுகவில் வெடித்த உட்கட்சிப் புயல்..!!

Published

on

2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் உட்கட்சி மறுசீரமைப்புப் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், கட்சியின் முக்கிய வியூக வகுப்பாளரான சபரீசன் பற்றிய விவாதங்கள் அக்கட்சிக்குள்ளேயே பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. கடந்த 2021 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு சபரீசனின் டெல்லி தொடர்புகளும் ஆலோசனைகளுமே பிரதான காரணமாகப் பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய தோல்விக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுக்கான வயது வரம்பு உள்ளிட்ட அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இந்தச் சூழலில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சபரீசன், தேர்தல் பின்னடைவுக்கான முழுப் பழியையும் தன் மீது திருப்புவதற்குத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ததாகத் தெரிகிறது. கட்சி மறுசீரமைப்பைக் காலத்தோடு செய்யாதது, தான் பரிந்துரைத்த வேட்பாளர்களுக்குத் தொகுதி ஒதுக்காதது மற்றும் தவெக தலைவர் விஜய்க்கு திரண்ட மக்கள் ஆதரவைச் சரியாகக் கணித்து வியூகங்களை மாற்றத் தவறியதே தோல்விக்கு முக்கியக் காரணம் என அவர் வாதிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

மேலும், 2021 தேர்தலை விட 2026-ல் தான் மிகக் கடுமையாக உழைத்த போதிலும், தனது முக்கிய ஆலோசனைகள் பல அலட்சியப்படுத்தப்பட்டதாக அவர் வேதனை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே, கட்சிக்குள் சபரீசனின் கை ஓங்குவதை உதயநிதி ஸ்டாலின் விரும்பவில்லை என்றும், இதனால் இருவருக்கும் இடையே நிலவிவந்த அதிகாரப் போட்டி தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் திமுக உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தோல்வியால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியும், அதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் சீரமைப்பு நடவடிக்கைகளும், கட்சிக்குள்ளேயே மூண்டுள்ள இந்த அதிகார மைய மோதலும் திமுகவின் அரசியல் எதிர்காலத்தில் புதிய பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in