#BREAKING : நேபாளம் பெரு வெள்ளம்.. 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை.. சற்றுமுன் அதிர்ச்சி தகவல்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

#BREAKING : நேபாளம் பெரு வெள்ளம்.. 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை.. சற்றுமுன் அதிர்ச்சி தகவல்…!!

Published

on

நேபாளத்தில் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பயங்கர பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, அங்கு சுற்றுலா சென்ற 400-க்கும் மேற்பட்ட இந்தியர்களைக் காணவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி ஆற்றில் சீறிப்பாய்ந்து வந்த வெள்ள நீர், நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் ஆகிய மாவட்டங்களைச் சூறையாடி, அங்கிருந்த வீடுகள், பாலங்கள், வாகனங்கள் மற்றும் நீர்மின் நிலையத் திட்டங்களை அடித்துச் சென்றுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தில் இதுவரை 8-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி மாயமான சுற்றுலாப் பயணிகளில் 100-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. நேபாள சுற்றுலா வாரியம் மற்றும் மீட்புக்குழுவினர் தற்போது போர்க்கால அடிப்படையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்டு தாயகம் கொண்டு வருவதற்கான அவசர மீட்புப் பணிகளைத் தமிழக அரசும், இந்தியத் தூதரகமும் இணைந்து முடுக்கிவிட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in