CRIME
ரூ.4000 பேரம்… ஒரு பொறி… ஒரே சைகை..! AHTU காவல்துறையின் பக்கா ஸ்கெட்ச்… போலி வாடிக்கையாளராகச் சென்று விபச்சார கும்பலின் தலையைத் தூக்கிய அதிரடி ஆபரேஷன்..!!
நவி மும்பை குற்றப்பிரிவின் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவினர், கடந்த வியாழக்கிழமையன்று நேருலில் உள்ள ஒரு விடுதியில் போலி வாடிக்கையாளர் ஒருவரை அனுப்பி நடத்தப்பட்ட சோதனையில், பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளது. அங்கு நடைபெற்று வந்த பாலியல் தொழிலில் இருந்து 12 வயது சிறுமி மற்றும் 26 வயது பெண் ஒருவரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். நேருல், ஷிரவனே கிராமத்தில் உள்ள லாட்ஜிங் மற்றும் போர்டிங் விடுதி ஒன்றில், வாடிக்கையாளர்களுக்கு அறைகளை வாடகைக்குக் கொடுத்து, பாலியல் தொழிலுக்காகப் பெண்களையும் வழங்கியதாகக் குற்றசாட்டு கூறப்பட்டது. அதன் பேரில், அந்த விடுதியின் இரண்டு மேலாளர்களையும் ஒரு பணியாளரையும் காவல்துறை கைது செய்துள்ளனர். காவல்துறையால் மீட்கப்பட்ட சிறுமி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
மேலும், அந்த சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாகப் பெற்றோரிடம் கூறி அவரது உறவினர்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஷிரவானே கிராமத்திற்கு அழைத்து வந்ததாகவும், அங்கு அந்த சிறுமி தனது உறவினர்களுடன் வசித்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனையடுத்து, அந்த விடுதியில் விபச்சாரம் நடைபெறுவதாகக் காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பொறி வைத்து பிடித்து கைது செய்துள்ளனர். அதனடிப்படையில் ஒரு போலி வாடிக்கையாளர் அந்த விடுதிக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அவர் ஒரு அறையை முன்பதிவு செய்த பிறகு, பாலியல் சேவைக்காக ஒரு பெண்ணைக் கேட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு பெண்ணுக்கு ரூ. 4,000 கேட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் பணத்தைப் பெற்றுக்கொண்ட சமயத்தில், அந்தப் போலி வாடிக்கையாளர் விடுதிக்கு வெளியே காத்திருந்த காவல் குழுவினருக்கு சைகை காட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர்கள் அந்த வளாகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். “கைது செய்யப்பட்டவர்கள், லாட்ஜ் மேலாளர்களான ஹிருதயகுமார் சிங், தீபக் ராம்ரக்கியானி மற்றும் பணியாளர் குலேஷ்வர் குமார் சிங் ஆவர்,” என்று அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. நேருல் காவல் நிலையத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது, ஆட்கடத்தல் மற்றும் கூட்டுக் குற்றப் பொறுப்புக்கான பிஎன்எஸ் பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் பேலாப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்றம் அவர்களை செப்டம்பர் 9-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
