LATEST NEWS
பட ரிலீஸுக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர் விஜய்..! மனப்பாடம் செஞ்சிட்டு வந்து ஒப்பிக்கிறார்… மிசா பற்றி அவருக்கு ஏதாவது தெரியுமா..? சட்டப்பேரவைக்கு வெளியே முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!!
விஜய் சட்டப்பேரவையில் மனப்பாடம் செய்த உரையை ஒப்புவிக்கிறார் என்று உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மிசா சட்டம் மற்றும் சர்க்காரியா கமிஷன் ஆகியவை குறித்து தமிழக முதல்வர் விஜய்க்கு ஏதாவது தெரியுமா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தன்னுடைய திரைப்படத்தின் ரிலீஸுக்காக கோடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்தவர் விஜய் என்றும், தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்ததே ஒரு விபத்து என்றும் கூறினார். ரீல்ஸுக்காக மட்டுமே சட்டப்பேரவையில் விஜய்யின் இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
