LATEST NEWS
இனி இமயமலை தாங்காது..! 60 ஆண்டுகளில் உருகிய பனிப்பாறைகள்.. சீன- நேபாள எல்லையில் நடந்த கொடூரம்.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்..!!
சீன – நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நிகழ்ந்த கொடூரமான பனிப்பாறை சரிவுக்கு புவி வெப்பமயமாதலே முக்கியக் காரணம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் அதிகரித்து வரும் வெப்பநிலையின் காரணமாக, இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி அழிந்து வருவதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் திபெத் பீடபூமியின் பனிப்பாறை பரப்பளவானது 51,000 சதுர கிலோமீட்டரிலிருந்து 39,000 சதுர கிலோமீட்டராகக் கணிசமாகக் குறைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களே இந்தத் தீவிர பனி உருகுதலுக்கு முதன்மை காரணியாக அமைந்துள்ளது.
இவ்வாறு பனிப்பாறைகள் அதிவேகமாக உருகுவதால், அந்தப் பிராந்தியத்தில் புதிதாகப் பல்லாயிரக்கணக்கான ஏரிகள் உருவாகியுள்ளன. இந்த ஏரிகள் உடைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் பேரழிவைத் தரக்கூடிய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
