2013-இல் உங்க அப்பாவோட அங்கே போனீங்களே மறந்துட்டா..? 2020-இல் EPS-ஐ சந்திச்சதும் மறந்துட்டா…? அவரை அன்னைக்கே கைது பண்ணியிருக்கணும்… முதல்வர் விஜய்யை விமர்சித்த MP வில்சன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

2013-இல் உங்க அப்பாவோட அங்கே போனீங்களே மறந்துட்டா..? 2020-இல் EPS-ஐ சந்திச்சதும் மறந்துட்டா…? அவரை அன்னைக்கே கைது பண்ணியிருக்கணும்… முதல்வர் விஜய்யை விமர்சித்த MP வில்சன்..!!

Published

on

கரூர் சம்பவத்தின் போது தமிழக முதலமைச்சர் விஜய்யைக் கைது செய்யாதது தான் மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும், மிசா காலத்தின் போது மு.க.ஸ்டாலின் அனுபவித்த கடுமையான சித்திரவதைகளையும், அதனால் அவருக்கு ஏற்பட்ட தாடை எலும்பு முறிவையும் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் கேலி செய்யும் விதமாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், “மிசா கொடுமைகளை நீங்கள் கேலி செய்கிறீர்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து விஜய்யின் கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய வில்சன், 2013-ஆம் ஆண்டில் உங்களது தந்தையுடன் கொடநாடு சென்றதும், 2020-ஆம் ஆண்டில் உங்களது திரைப்பட வெளியீட்டிற்காக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததும் உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று வினவியுள்ளார். அத்துடன், நாகரிகமற்ற மற்றும் கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வதை முதலமைச்சர் விஜய் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in