LATEST NEWS
“தமிழகத்தில் நடப்பது ’23-ம் புலிகேசி’ ஆட்சி தான்..” தவெக அரசை மிகக் கொடூரமாகச் சாடிய டிடிவி தினகரன்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவெக ஆட்சி முற்றிலும் நிர்வாகத் திறனற்றுச் செயல்பட்டு வருவதாகவும், அது உறுதியாகக் கவிழும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது ’23-ம் புலிகேசி’யின் ஆட்சி தான் என்று சாடிய அவர், தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கவலை தெரிவித்தார். மேலும், தேர்தல் பிரசாரத்திற்காகச் செல்லும் இடங்களிலெல்லாம் ஏற்கனவே முடிவுற்ற திட்டங்களையே மீண்டும் தொடங்கி வைப்பதைத் தவிர, இந்த அரசால் புதிதாக எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வர முடியவில்லை என்றும் அவர் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
ஆளுநருடனான இந்தச் சந்திப்பில், தவெக அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, ஆளுநரிடம் முறையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும், நிர்வாகக் குளறுபடிகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட டிடிவி தினகரன், மக்கள் மாற்றத்தை விரும்பி தவெக-வைத் தேர்ந்தெடுத்த போதிலும், இந்த அரசுக்குக் குறைந்தபட்ச பொது அறிவோ அல்லது நிர்வாகத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதலோ இல்லை என்று விமர்சித்தார். இந்த அதிரடிப் பேட்டி தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
