“சர்ப்ரைஸ் ஹோம்மிங்..” யூகே-விலிருந்து திடீரென வந்த மகன்… கதவை திறந்ததும் தாய் செஞ்ச காரியம்..! நெஞ்சை நனைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சர்ப்ரைஸ் ஹோம்மிங்..” யூகே-விலிருந்து திடீரென வந்த மகன்… கதவை திறந்ததும் தாய் செஞ்ச காரியம்..! நெஞ்சை நனைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

குடும்பத்தினரிடமிருந்து வெகுநாட்கள் பிரிந்து வாழ்வது எவ்வளவு கடினமானது என்பதை, வீட்டை விட்டு தொலைவில் தங்கியிருப்பவர்கள் மட்டுமே நன்கு அறிவர். வேலை அல்லது படிப்பு விஷயமாக வெளியே செல்லும்போது குடும்பத்தின் மீதான ஏக்கம் அதிகரிப்பது இயல்பே. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ பலரது கண்களையும் குளமாக்கியுள்ளது.

இங்கிலாந்திலிருந்து  இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு திடீரென ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிய இளைஞர் ஒருவர், குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். எந்தவித முன்னறிவிப்புமின்றி எதிர்பாராதவிதமாக அவர் வீடு திரும்பிய தருணம் அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, நீண்ட நாட்களுக்குப் பின் மகனை திடீரென கண்முன்னே பார்த்த தாயின் எதிர்வினை பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்பட வைப்பதாக அமைந்தது.

Advertisement

https://www.instagram.com/reel/De4LhxEAlJI/?utm_source=ig_web_button_share_sheet

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், தாய் தனது மகனைப் பார்த்தவுடன் ஓடிச்சென்று கட்டியணைத்துக் கொள்ளும் விதம் நெஞ்சை நெகிழ்விக்கிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் தாயின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. இந்த வைரல் வீடியோ, இன்றைய இயந்திரத்தனமான ஓட்டத்திலும் குடும்பத்துடன் செலவிடும் பொன்னான கணங்களே உலகின் உண்மையான செல்வம் என்பதை மீண்டும் ஒருமுறை அனைத்திற்கும் நினைவூட்டுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in