LATEST NEWS
முதலமைச்சர் குடும்பத்தில் பெரும் சோகம்…! செய்தி கேட்டதும் உடனே வீட்டிற்கு விரைந்த விஜய்.. அரசியல் மற்றும் திரையுலகினர் அஞ்சலி..!!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மாவான அமல் ராஜசேகரன் வயது மூப்பு காரணமாகச் சென்னையில் காலமானார். இவர், முதலமைச்சர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் ராஜசேகரனின் மனைவி ஆவார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
பெரியம்மாவின் மறைவுச் செய்தியைக் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு உடனடியாக நேரில் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த அமல் ராஜசேகரனின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர், தனது பெரியம்மாவின் நினைவாகச் சிறிது நேரம் மௌனம் காத்தார்.
முன்னதாக, முதலமைச்சரின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் நீலாங்கரை இல்லத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர். அஞ்சலி செலுத்திய பிறகு, முதலமைச்சர் விஜய் தனது தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினார்
