“அவ எப்பப் பார்த்தாலும் போன் நோண்டிக்கிட்டே இருந்தா..” ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற தாய்.. 14 வயது பெற்ற மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அவ எப்பப் பார்த்தாலும் போன் நோண்டிக்கிட்டே இருந்தா..” ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற தாய்.. 14 வயது பெற்ற மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுமன் கோவில் காலனியில், மொபைல் போன் அதிகமாகப் பயன்படுத்தியதற்காக 14 வயது பெற்ற மகளையே தாய் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த முய்யாடி ராஜு – விஜயலட்சுமி (34) தம்பதியரின் 14 வயது மகள் சுவர்ணா என்கிற லவ்லி, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தச் சிறுமி எப்போதும் தனது மொபைல் போனைப் பயன்படுத்திக் கொண்டே இருந்ததால், தாய் விஜயலட்சுமிக்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 27 அன்று இதே மொபைல் போன் விவகாரத்தினால் இருவருக்கும் இடையே மீண்டும் ஒரு கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.

இதில் கடும் ஆத்திரமும் ஆவேசமும் அடைந்த தாய் விஜயலட்சுமி, பெற்ற மகள் என்றும் பாராமல் சுவர்ணாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், இந்தச் சம்பவத்தைத் தற்கொலை போலக் காட்டி தப்பிப்பதற்காக, மகளின் உடலை ஒரு புடவையால் தூக்கில் தொங்கவிட்டுப் பச்சையாக நாடகமாடியுள்ளார். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போலீசார் விஜயலட்சுமியிடம் தங்களின் பாணி விசாரணை நடத்தினர். இறுதியில், தனது மகள் மிதமிஞ்சிய அளவில் செல்போன் பயன்படுத்தியதால் ஆத்திரத்தில் அவளைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து கொத்தூர் போலீசார் விஜயலட்சுமியைக் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in