அழுகாதீங்கம்மா..! “நான் பார்த்துக்கறேன்… நீங்க உட்காருங்க” கண்ணீருடன் வந்த பெண் – ஆறுதல் கூறிய முதல்வர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அழுகாதீங்கம்மா..! “நான் பார்த்துக்கறேன்… நீங்க உட்காருங்க” கண்ணீருடன் வந்த பெண் – ஆறுதல் கூறிய முதல்வர்..!!

Published

on

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவின் போது, தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து மனு அளிப்பதற்காகப் பொதுமக்கள் பலர் வருகை தந்திருந்தனர். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் குறைகளை விவரித்து முதலமைச்சரிடம் கண்ணீருடன் தனது கோரிக்கை மனுவை அளித்தார்.

அப்பெண்ணின் அழுகையையும் கவலையையும் கண்ட முதலமைச்சர் விஜய், உடனே அவரை இருக்கையில் அமருமாறு கனிவுடன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, “நான் பார்த்துக்கறேன்… நீங்க உட்காருங்க!” என்று நெகிழ்ச்சியூட்டும் வகையில் ஆறுதல் கூறிய முதல்வர், அவர் அளித்த மனுவில் உள்ள விபரங்களைப் பொறுமையுடன் கேட்டறிந்து, அதற்குரிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in